பெண்களின் இடுப்புப் பகுதி Women's pelvis - kalai tailor

ladies tailor

Home Top Ad

பெண்களின் இடுப்புப் பகுதி Women's pelvis

பாடம்-7
பெண்களின் இடுப்புப் பகுதி  Women's pelvis

   ஓர் உருவத்தின் அங்க அளவுக்கும் மற்றொரு உருவத்தின் அங்க அளவுக்கும் அளவுகள் ஒத்திட்டு வருவதில்லை என்பது உண்மை, எனினும் விகித சம அளவின்படி தயாரித்துள்ள விகித சம அட்டவணையைப் பார்த்து படித்து அந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அளவுகளையும் கவனிக்க வேண்டும்
                                                       

மார்பு சுற்றளவுக்கும் புட்டச்சுற்றளவுக்குமுள்ள வித்தியாசம் 3 அங்குலம் முதல் அங்குலம் வரை இருக்கும்,
மார்பு சுற்றளவுக்கும் இடுப்புச்சுற்றளவுக்குமுள்ள வித்தியாசம் 6 அங்குலம் முதல் அங்குலம் வரைஇருக்கும்,
இடுப்புச் சுற்றளவுக்கும் புட்டச் சுற்றளவுக்குமுள்ள வித்தியாசம் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இருக்கும்,
உதாரணமாக
மார்புச்சுற்றளவு 35"இடுப்புச்சுற்றளவு 28"புட்டச்சுற்றளவு 38" இந்த அளவின்படி மார்புச்சுற்றளவுக்கும் புட்டச்சுற்றளவுக்குமுள்ள
வித்தியாசமானது3அங்குலம் என்பதைக் கவனிக்கவும்.
மார்புச்சுற்றளவு 37 இடுப்புச்சுற்றளவு 30° புட்டச்சுற்றளவு 41இந்த அளவையும் கவனிக்கவும், மார்புச்சுற்றளவுக்கும் புட்ட சுற்றளவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 4 அங்குலம்,
மார்புச்சுற்றளவு 39" இடுப்புச்சுற்றளவு 32" புட்டச்சுற்றளவு 43"இந்த அளவு மார்புச்சுற்றளவுக்கும், புட்டச்சுற்றளவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 4 அங்குலம் தான்.

மேலே குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து பெண்கள் மார்புச்சுற்றளவுக்கும் புட்ட சுற்றளவுக்கும், இடையேயுள்ள வித்தியாசத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும். குறிப்பாக மார்புச்சுற்றளவு 41,43,45,47அங்குலம்கொண்டிருக்கும்
 விகித சம அளவுக்குப் புட்டச் சுற்றளவானது 5 அங்குலம் வித்தியாசம்
பெற்றிருக்கும்
மேலே குறிப்பிட்டுள்ள இடுப்புப்பகுதிஅளவுகளைஆதாரமாகக் கொண்டு வித்தியாசம் பெறுவதைக் காணவும்
புட்டச் சுற்றளவு 37"
இடுப்புச் சுற்றளவு 26
வித்தியாசம் அங்குலம் -11
புட்டசுற்றளவு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இடுப்புச்சுற்றளவானது 11
அங்குலம் வித்தியாசம் பெற்றிருக்கிறது.
புட்டச்சுற்றளவு 38'
இடுப்புச்சுற்றளவு 28'
வித்தியாசம் 10' அங்குலம்
பெண்களின் இடுப்பு பாகமானது புட்டச்சுற்றளவிலிருந்து10' அங்குலம் முதல் 11'அங்குலம் வரையில் குறைவாக இருப்பதே பெண்களின் இடுப்பு பகுதி பற்றிய உடற்கூற்றுஇலக்கணத்தின் பிரிவாகும்.   
ஒன்பது வகையான பெண்களின் அமைப்பு
                                           எட்டு வகையான பெண்களின் அமைப்பு



                                     ஐந்து வகையான பெண்களின் அமைப்பு

                                     மூன்று வகையான பெண்களின் அமைப்பு

பெண்களின்உருவஅமைப்புமூன்று பெரும்பிரிவுகளில்அடங்கியுள்ளன.

1.நிலையானஉருவம்
2.ஒல்லியான உருவம்
 3. பருமனானஉருவம்

1.நிலையான உருவம் (Normal Figure)
இந்தஉருவத்தில் சராசரி அளவுகளுக்கு ஏற்ப உடலின் பாகங்கள் அளவைப் பெற்றிருக்கும், விகிதசம அட்டவணையைப் பின்பற்றிய நிலையில் இருக்கிற அமைப்பு நிலையான உருவம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
2.ஒல்லியான உருவம் (Leone figure)
இந்த உருவத்தில் உடல் அளவுகள் யாவும் குறைந்திருக்கும்,
உயரம்,நிலையானஉருவத்தை ஒத்திருப்பினும் கூடச் சுற்றளவு அளவுகள் யாவும் நிலையான உருவத்தின் அளவுகளைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. .3.பருமனான உருவம் Structure)
இந்த உருவத்தில் உடல் அமைப்பு நிலையான உருவத்தின்
உயரத்தை ஒத்திருந்தாலும், சுற்றளவு அளவுகள் யாவும்
அதிகமாக இருக்கும். இதற்குப் பருமனான உருவம் என்று பெயர்.

பெண்களின் உருவத் தன்மையை3 விகிதமாகபிரித்திருப்பதைஇங்கே
விளக்கியுள்ளேன்இந்தஅடிப்படையின் கீழ் உருவ வகை மாறுதல்கள் ஆராய்ச்சிகள்மூலம்காணப்படுகின்றன.
தையற்கலையில் வாடிக்கையாளரின்
உடல் அளவுகளை எடுக்கும் போது குறிப்பிட்ட இந்த
அடிப்படையானது மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.
ஆரம்பப் பயிற்சி மாணவ மாணவியருக்கு இந்த விளக்கம் உதவியாக
இருக்கும்.
தொடர்புக்கு :9600828825


1 கருத்து: