பாடம் 3
எட்டுத்தலைக்கொள்கை
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் எனப்படும்,
ஒவ்வொரு பாகமும், ஒரு தலை உயரத்திற்கு சமமாகும்.
விகித சம அளவுகளைக் கொண்டோ அல்லது சீரான வளர்ச்சி பெற்ற, மனிதனின் தலை அளவை அடிப்படையாகக் கொண்டோ, உயரத்தை எட்டு பிரிவாக பிரிக்கலாம், இதற்கு எட்டுத்தலைக்கொள்கை என்று பெயர்.
அவையாவன
1. தலைப்பாகம் (Head)
2. மார்புபாகம் ( Breast)
3. வயிற்றுப் பாகம் (Stomach)
4. புட்டத்தின் பாகம் (Hip)
5. தொடைபாகம் (Thigh)
6. முட்டிக்காலின் பாகம் (Knee)
7. கால் கண்டச்சதை பாகம் (Calf)
8. காலின் பாதபாகம் (Leg Bottom)
இந்த முறைப்படி பெண்களின் தலைப்பாகத்தின் நீள அளவுகளை அடிப்படையாகக் கொண்டு உயரத்தை எட்டு பாகமாக பிரித்திருக்கிறார்கள், தலை உச்சியிலிருந்து பின் கழுத்து முள் எலும்புவரையிலுள்ள முதல் பாகத்தின் நீள அளவை கணக்கிட்டு, அந்த அளவையே எட்டு சம பாகங்களாக பிரித்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக