கால்களின் அமைப்பு,Structure of the legs, - kalai tailor

ladies tailor

Home Top Ad

கால்களின் அமைப்பு,Structure of the legs,

பாடம்-4
கால்களின் அமைப்பு மூன்று விகிதங்கள்
1. அகன்ற நிலைக் கால்கள் (Open Leg Structure)
2. நிலையான கால்கள் (Normal Leg Structure)
3. இறுக்க நிலைக் கால்கள் (Close Leg Structure)
1 .அகன்ற நிலைக் கால்கள் அமைப்பு
பெண்களின் புட்ட அளவு உடல் பருமனுக்கேற்ப தொடைப்பாகத்தில் சதைப்பற்று குறைவாக இருக்கும், சதைப்பற்று குறைவான தொடைபாகத்தை கொண்டவர்களின், கால்களின் அமைப்பில் கொஞ்சம் மாற்றம் இருக்கும், உருவ அமைப்பும் சற்று மாறுபடும், குறைவான சதைப்பற்றை பெற்றிருக்கும் பெண்களின் கால்களின் அமைப்பைத் தான், அகன்ற நிலைக் கால்களின் அமைப்பு என்று சொல்லுவார்கள்.
2. நிலையான கால்களின் அமைப்பு
பெண்களின் புட்ட அளவு உடல் பருமனுக்கேற்ப தொடைப்பாகத்தில் சதைப்பற்று இருக்கும், நிலையான உருவம் பெற்றிருக்கும்,விகித சம அளவு முறையில் சதைப்பற்றை பெற்றிருக்கும் கால்களின் அமைப்பை, நிலையான கால்களின் அமைப்பு என்று சொல்லுவார்கள்.
3. இறுக்க நிலைக் கால்கள் அமைப்பு
பெண்களின் புட்ட அளவு உடல் பருமனுக்கேற்ப தொடைப்பாகத்தில் சதைப்பற்று அதிகமாக இருக்கும், சதைப்பற்று அதிகமான தொடைபாகத்தை கொண்டவர்களின், கால்களின் அமைப்பில் கொஞ்சம் மாற்றம் இருக்கும், உருவ அமைப்பும் சற்று மாறுபடும்,விகித சமமற்ற முறையில் அதிகமான சதைப்பற்றை பெற்றிருக்கும் பெண்களின் கால் அமைப்பைத் தான்,இறுக்க நிலைக் கால்களின் அமைப்பு என்று சொல்லுவார்கள்.

தொடர்புக்கு:9600828825

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக