பாடம்-1
தையல் பயிற்சி (tailoring tutorial)
முன்னுரை :
தையற்கலை வளர்ச்சியடைய வேண்டுமென்கிற நோக்கத்தில், தையற்கலையில் பெருமளவு மாற்றங்கள் உண்டாகி வருகின்றன, தையற்கலை பயிற்சி கூடங்கள் உருவெடுத்த வண்ணம் இருக்கின்றன, சுதந்திரமாக தொழில் நடத்த ஏற்றது என்ற முறையில், தையல் கலை முன்னிலையில் நிற்பதை யாவரும் அறிவர்.
பெண்கள் யாவரும் தையல் கலையில் சிறப்பாகத்திகழ வேண்டும் என்பது என் நோக்கம், இன்றைக்கு சுயவேலை வாய்ப்புக்கு தையல் கலை ஏற்றதாக இருப்பதை பெண்கள் உணர்ந்து இருக்கிறார்கள், தையல் கலையை தொழிலாக மேற்கொள்ளவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும், தையல் பயிற்சி கூடங்களில் சேர்ந்து தொழிற்கல்வி பெறவும் முனைகின்றனர், பெண்களுக்கு ஏற்ற தொழில் தையல் தொழில்தான்.
அரசினரால் நடத்தப்பட்டு வரும் தொழில் நுட்பத் தேர்வுகளில் தையல் கலை தேர்வும் நடத்தப்படுகின்றது, தேர்வு எழுத செல்லுகிற மாணவிகளுக்கு ஏற்றவாறு இந்த பதிவை எழுதியுள்ளேன், குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் பெண்கள் யாவரும் தங்கள் ஓய்வு நேரத்தை வீணாகக் கழிக்காமல் வருவாயை ஈட்டி குடும்பச் செலவைச் சரிசெய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக