பாடம்-5
பெண்களின் புட்டப்பகுதி பற்றிய உடற்கூறு விளக்கம்
பெண்களின் உடலமைப்பு பனிரெண்டு வகைகள், அதில் மூன்று வகையான உடலின் புட்ட அமைப்பை பற்றிய உடற்கூறு.
பெண்களின் புட்ட பகுதியானது,விகித சம அளவின்படி இடுப்புச் சுற்றளவுக்கும், புட்டச்சுற்றளவுக்கு் பத்து அங்குலம் வித்தியாசம் பெற்றிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும், இடுப்பைக் காட்டிலும் பத்து அங்குலம் அதிகமான வித்தியாசம் இருப்பதற்கு புட்ட பகுதியில் சதைப்பற்று அதிகமாக இருப்பதே காரணம்.
ஒன்பது வகை
ஐந்து வகை
மூன்று வகை
1. நிலையான புட்டம் (Normal Hip Measure)
இடுப்பு அளவுக்கும் புட்ட அளவுக்கும் பத்து அங்குலம் வித்தியாசம் இருக்கும்.
2. சதைப்பற்று குறைந்த புட்டம் (Flat Hip Measure)
விகித அளவுக்கு ஒத்து வராத இடுப்பைப் பெற்ற பெண்களின் புட்டப்பகுதி பற்றிய உடற்கூறு விளக்கம்
இடுப்பு அளவுக்கும் புட்ட அளவுக்கும் ஆறு அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை வித்தியாசம்.
3. சதைப்பற்று மிகுந்த புட்டம் (Stooping Hip Measure)
இடுப்புச் சுற்றளவுக்கும் புட்ட அளவுக்கும் உள்ள வித்தியாசம் பதினொன்று அங்குலம் முதல் பதிமூன்று அங்குலம் வரையில் வித்தியாசம் இருக்கும்.
குறிப்பு
- உருவத்தின் உயரம்,
- உருவத்தின் வகை,
- ஆடைக்கு தேவையான அளவு,
- காலை நேரத்தில் அளவு எடுத்தால் மிகச்சரியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக