பாடம் -9
பெண்கள் விரும்பி உடுத்தும் உடைகளின் நிறங்கள்பற்றி இங்கே விளக்கியுள்ளேன். உடைக்கு ஏற்ற நிறம், உடலுக்கு ஏற்ற நிறம் என்று பாகுபாடு இருப்பதைக் கவனியுங்கள்.கறுத்த நிறத்தவர்கள், மேலும் கறுத்த நிற உடைகளை உடுத்துவது
அழகாக இருக்காது. எனவே உடைகளுக்குத் துணிகளைத் தேர்ந்தெடுக்கும் போது நிறங்களின் தன்மைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நிறத்தின் பிரிவுகள் 3 வகைப்படும்.
1. முதல் நிலை நிறங்கள்: சிவப்பு,மஞ்சள்,நீலம்.
2. இரண்டாம் நிலை நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை.
3. மூன்றாம் நிலை நிறங்கள்: சிவப்பு கலந்த ஆரஞ்சு,மஞ்சள் கலந்த ஆரஞ்சு,மஞ்சள் கலந்த பச்சை,நீலம் கலந்த ஊதா.
முதல் நிலை நிறங்களைச் சரிசமமாகச் சேர்த்தால் இரண்டாம் நிலை நிறங்களில் காணப்படும் நிற வகைகள் கிடைக்கின்றன.
உதாரணமாக,
சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் சரிசமமாக கலந்தால் ஆரஞ்சு நிறம் கிடைக்கிறது,
இவ்விதமான கலவையின் நிறத்தன்மையே இரண்டாம் நிலையாகும்
இரண்டாம் நிலை நிறத்தில் காணப்படும் நிறங்களைச் சரிசமமாகக் கலந்தால் மூன்றாம் நிலை நிறங்கள் கிடைக்கின்றன.
நிறங்களின் பொதுத் தன்மைகள்
நிறங்களின் பொதுத் தன்மை இரண்டு வகைப்படும்.
அவற்றுள் ஒன்று வெப்ப நிறம் அல்லது கடின நிறம், இரண்டாவது
குளுமை நிறம் அல்லது மென் நிறம்.
வெப்ப நிறம் - சிவப்பு, மஞ்சள், ஊதா, பழுப்பு, ஆரஞ்சு,
குளுமை நிறம் - நீலம், பச்சை, கறுப்பு,
வெள்ளை நிறத்தை தூய்மையான நிறம் என்பார்கள்.
கறுப்பு நிறமானது பிற நிறங்களிலிருந்து மாறுபடுகிறது. ஏனெனில்
இதன் நிறம் மூல நிறத்திலிருந்து மாறுபட்டிருப்பதே காரணம்.
உடைக்கு ஏற்ற துணிவகைகளை வாங்க வேண்டும்.
அத்துடன் உடை உடுத்துபவர்களின் உடல் நிறத்தை பொருத்தும்
துணியின் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். துணி
களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் துணியின் நிறத்தை
பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.
துணியின் நிறங்களும் அதில் காணப்படும் நவீன கால
டிசைன்களும்உடைஉடுத்துபவர்களின் தோற்றத்தைக்
கீழ்கண்டவாறு மாற்றியமைக்கக் கூடியதாக விளங்குகின்றன.
-1. சாதாரண நிறங்கள் உடலமைப்பைக் கவர்ச்சியான
தோற்றத்தில் மாற்றிக் காட்டுகின்றன.
2. துணியில் காணப்படும் நீளவாட்டுக் கோடுகள்
(டிசைன்கள்) உடலமைப்பை உயரமாகத் தோன்றச் செய்கின்றன.
3. துணியில் காணப்படும் அகலவாட்டுக்கோடுகள்
(டிசைன்கள்) உடலமைப்பை உயரம் குறைவாக தோன்றச் செய்கின்றன.
மற்றும்(குட்டையாகக் காட்டுகின்றன)
4. துணியில் காணப்படும் பெரியளவு நவீன மாதிரிகள்,
வண்ணப் பூக்கள் ஆகியவை உடலமைப்பைப் பருமனாகக்
காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக