பாடம் -11
1. துணியின் நீளம்,அகலம்,இழையின்பிடுங்கல்,டையிங் சரியாக உள்ளதா என சரி பார்த்து,துணியின் அளவு உடைக்கு போதுமானதா என்பதை சரி பார்க்க வேண்டும்.2. துணியின் வலப்புறம், இடப்புறம் பார்த்து இடப்புறப் பக்கத்தின் மேல் பரப்பின் காகித மாதிரியைப் பரப்ப வேண்டும்.கத்திரிக்கோலால் துணியை வெட்டும் போது கவனமாகவும், நிதானமாகவும் வளைவுகளின் தன்மைக் கேற்பச் சரியாக வெட்ட வேண்டும்.
3. குறிப்பாக ஒரே மேல் நோக்கிப் பார்வையிலுள்ளபறவை,பூக்கள்,வாகன பொம்மை,போன்ற டிசைன் துணிகளை வெட்டும் போது முக்கிய கவனம் துணியின் கரை பாகம் இரு முன்னுடல், பின்னுடல் இவைகளை ஒரே பார்வையாக வெட்ட வேண்டும். உடைகள் வெட்டும் போது தனித்தனியாக வெட்டாமல் மடக்கிப் போட்டு வெட்டினால் தலைகீழாக மாறிவிடும்.
4. மேலும் உடைகளுக்கு முன், பின் பாகங்கள் கிடைக்காமல் இருந்தால் முன் பட்டித் துண்டுக்கு இணைப்புத் துண்டு கொடுத்தால் நல்லது.
5. உடையின் பிரதம பாகங்களை வெட்டிய பிறகே உதிரி பாகங்களை வெட்ட வேண்டும்.
6. உடைக்குத் தேவையான டார்ட்டுகள், பிலிட்டுகள்,எந்தப்பகுதியில் தேவை என்பதை மாதிரியில் இருப்பதைக் கவனித்துக் குறிக்க வேண்டும்.
7. துணியில் தையல் வாசி, உள்பக்கம் வாசி துணியில் விட்டு வெட்டுதல் வேண்டும்.
8. Half Pant, Full Pant Knicker, Pyjama, Kammies.Umbrella Shirt போன்ற உடைகள் வெட்டும் போது ஒவ்வொரு துண்டையும் தலைகீழாக மாற்றி போட்டு வெட்ட வேண்டும்.தையல் போட்டுக் கீறிவிட வேண்டும்.
9. இணைப்புத் துண்டு வருவதாக இருந்தால் கையின் அடிபாகம், பேண்டின் பேக் சைடு, நேர் வசத்தில் வரக்கூடிய வெட்டு பாகங்களுக்கு அதே போல் நேர் வசத்தில் துண்டை வெட்டி ஓரத்தில் Tailor Tacking செய்ய வேண்டும். கட்டம் போட்ட துணியாக இருந்தால் கட்டத்தின் இணைப்பை நேருக்கு நேராக வைத்து வெட்டவும்.
10. வெட்டி எடுத்த பாகங்கள் சரியகாக இருக்கின்றனவா என்று சரி பார்க்க வேண்டும். வெட்டி எடுத்த உடையின் அளவுகளைக் காகித மாதிரியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கிராஸ் பீஸ் துணியில் வரவேண்டிய உடைகள்:
1.கட் ஜாக்கெட் முன்னுடல் மட்டும்,
2. சட்டைகளுக்கு முன்யோக், பின்யோக் பாக்கெட் முன்பக்க காஜாபட்டி, பெண்கள் உடைகளில் ஸ்கர்ட் பிளாப் அலிகார் பைஜாமா, கல்லித்துண்டு போன்ற கிராஸ்பீஸ், துணியில் வெட்டப்பட வேண்டும்.
3. பிரேசியர், கட்டோரி பிளவுஸ், இவைக்கு முன்பாகத்தில் குழந்தைகளுக்கு பிப் நாப்கின் போன்ற உடைக்கும் போடப்படும்.
தேவையான கொள்கைகள் :
1. குறிப்பாக வயதிற்கு தகுந்தபடி துணியின் அளவை தெரிந்து இருக்க வேண்டும்.
2. தவறாக வெட்டுவதை திருத்தவும்
3. தவறாக வெட்டியதை துணி பற்றாக்குறைவாக இருக்கும் உடைகளை கூச்சமின்றி மூத்த கலைஞரிடம் கேட்டு அறிய வேண்டும்.
4. விழாக் காலங்களில் ஒரேத் துணியை குறிப்பாக 10 மீட்டருக்கு மேல் கொடுத்து 3 வயது, 7வயது, 12 வயது பெரியவர்களுக்குரிய அரைக்கை சிலாக் சர்ட் துணியில் சர்ட் வெட்டும் படி இருந்தால், அனைவருக்கும் பேட்டர்ன் எடுத்து துணியை முழு நீளமாக விரித்து அதில் பேப்பர் பேட்டர்னை பரப்பி துணி சிக்கனமாக குறுக்கு, நெடுக்கு, கரைபாகம் பார்த்து மார்கிங் செய்து பின் வெட்ட வேண்டும்.இவ்விதமாக கட்டிங் செய்தால் துணி அதிகமாக மீதம் கிடைக்கும்.
5. எக்காரணத்தை முன்னிட்டும் மற்றவர் கட்டிங் செய்து கொடுத்த ஆடையை நாம் தைத்து கொடுக்கவோ, கூலி (கட்டணம்) வாங்கி மற்றவர் தைப்பதற்கு நாம் கட்டிங் செய்து கொடுக்கவோ கூடாது. 6. தையற்காரர்களையும் குறிப்பாக வெளியிலிருந்து தைத்து வரும் உடைகளையும் குறை கூறக்கூடாது
7. ஒரு துணியை மற்றவருக்கு மாற்றி கொடுக்காத வண்ணம் துணிஆர்டர் வாங்கும் போது துணித்துண்டை கட்டிங் செய்து இணைத்து கொடுக்க வேண்டும்.
8. உடனுக்குடன் அளவு துணிகளை கொடுத்து விட வேண்டும்.
9. தையல் கூலி விஷயங்களில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது.
(மொத்த பணம் சேர்த்து வாங்க வேண்டும்)
10. கட்பீஸ்(மீதி) துணியில் தைத்த ஆடையை விற்பனைக்கு வைக்கக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக