பாடம் -12
அத்தியாவசியமான அளவுகள்:
1 மார்புச் சுற்றளவு
2 ஸ்தனத்தின் சுற்றளவு
3 அடி மார்புச் சுற்றளவு
4 இடுப்புச் சுற்றளவு
5 இயற்கையான இடுப்பளவு
6 ஸ்தனக்குறி நீளம்
7 அடி மார்பு நீளம்
8 பின் முதுகு முழு அளவு
9 பின் முதுகு பாதி அளவு
10 தோள்பட்டை முழு அளவு
11 தோள்பட்டை பாதி அளவு
12 கழுத்துச் சுற்றளவு
13. கை நீளம்,
14 முன்னங்கைச் சுற்றளவு
15 முன்பாக உடையின் நீளம்
16 பின்பாக உடையின் நீளம்
17 நெடுங்கால் நீளம்
18 பாதச் சுற்றளவு
இந்த அளவுகள் யாவும் பெண்கள் உடைக்கு பொதுவாக தேவையான அளவுகள். நாம் எந்த உடை தைக்க போகிறோம், அந்த உடைக்கு எந்த எந்த அளவுகள் அவசியம் என்பதை அறிந்து அளவெடுக்க வேண்டியது முக்கியம்.
ஒவ்வொரு உடைக்கும் தேவையான அளவுகள்:
உள்பாடி: 1) பாடி உடையின் முன்பாக நீளம், 2) மார்புச்சுற்றளவு, 3) இடுப்புச் சுற்றளவு பிரேசியர்ஸ் தற்போது பெண்கள் அதிகமாக அணிந்து வரும் நவீன உள்வகை இது.
சோளி வகைகள்:
1. மார்புச் சுற்றளவு
2. அடி மார்பு சுற்றளவு
3. மார்புச் சுற்றளவு
4. இடுப்புச் சுற்றளவு
5. தோள்பட்டை அளவு (பாதி)
6. கை நீளம் (2 பாகத் தோள்பட்டை அளவிலிருந்து).
7. முன்னங்கை சுற்றளவு
8. இயற்கையான இடுப்பு நீளம்
ப்ளவுஸ், சிலாக், ஷர்ட்டு, ஜிப்பா உடைகளின் அளவுகள்.
1. மார்புச் சுற்றளவு
2. இடுப்புச் சுற்றளவு
3. இயற்கையான இடுப்பு நீளம்
4. தோள்பட்டை பாதி அளவு
5. கை முழுநீளம் ( பாகத் தோள்பட்டை அளவிலிருந்து)
6. முன்னங்கை சுற்றளவு
7. முன்பாக உடை நீளம்
8. பின்பாக உடை நீளம்
டிரேசர் உடைகள்:
1. நெடுங்கால் நீளம்,
2. இடுப்புச் சுற்றளவு,
3. புட்டச் சுற்றளவு.
4. நெடுங்கால் நீளம்,
5. புட்டச் சுற்றளவு,
6. பாதச் சுற்றளவு.
பெண்கள் உடைகளைப் பொறுத்த வரையில் மார்பு உடைகள், கால்சட்டை உடைகள் என்று இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன
உடைக்குத் தேவையான அளவுகள் மட்டும் அளவெடுப்பது சிறந்த முறையாகும். ஏனெனில் உடைகளின் மாறுபாட்டுக்கேற்ப அளவுகள் மாறுபடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக