துணி வகைகள் Fabrics - kalai tailor

ladies tailor

Home Top Ad

துணி வகைகள் Fabrics

பாடம்-8
துணி வகைகள் - Fabrics


    இந்தப் பகுதியில் துணியின் வகைகள், தரம் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.தையல் பயில்பவர்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய விஷயம் இது.
 துணியின் வகைகள் மூன்று
1.தாவரவகை, 2.பிராணிவகை, 3.செயற்கைவகை.

தாவரவகை:(vegetable fibre )
தாவரவகைக்கு உதாரணமாகப் பருத்தித்துணி வகைகளைக் கூற வேண்டும். ஏனெனில் பருத்திச்செடியிலிருந்து பருத்தி கிடைக்கிறது. பருத்தித் துணி வகைகளையே(cotton)காட்டன் என்று கூறுகிறார்கள்.
பருத்தி வகையைச் சேர்ந்த துணிகள் :
1. மல், 2. லாங்கிளாத், 3. காக்கி, 4. வாயில், 5. மேட்டி, 6.பாப்ளின், 7. கதர்,
8. மஸ்லின், 9. ட்ரில், 10. பேஸ்மெண்ட்,11.ஆர்கண்டி

பிராணிவகை : (Animal Fibre)
உல்லன், (கம்பளி) பட்டுத் துணி வகைகளைப் பிராணிவகை என்று கூறலாம். ஆட்டு உரோமங்களிலிருந்து உல்லன் துணிகள் நெய்யப்படுகின்றன. பட்டுப்பூச்சியினின்றும் பட்டுத்துணிகள் தயாரிக்கப்படுகின்றன.
உல்லன் துணியின் உட்பிரிவுகள் மூன்று அவையாவன:
1. கார்பெட் வுல், 2. காஷ்மீர் வுல், 3. கோட் வைபர்.
கார்பெட் வுல்:  இந்தவகை சாதாரண ஆட்டின் உரோமத்திலிருந்து கிடைக்கிறது. கம்பளிநூல், கெட்டியாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
காஷ்மீர்வுல்:இந்த வகை நூல் மென்மையாகவும் மிருதுத் தன்மையுடையதாகவும் இருக்கிறது. காஷ்மீர் கம்பளி மிகச் சிறந்தது. காஷ்மீரிலுள்ள ஆட்டின் உரோமத்திலிருந்து இந்த நூல் தயாரிக்கப்படுவதால் இதற்குக் காஷ்மீர் வுல்லன் என்று பெயர் வந்தது. மிகவும் மிருதுவாகவும்  பளப்பளப்பாகவும் இந்த வுல் இருக்கும்.
கோட் வைபர்: அங்கோரா என்ற வெள்ளாட்டிலிருந்து எடுக்கப்படும் உரோமத்துக்குக் கோட்வைபர் என்று பெயர்.
கோட்வைபர் நூலில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. 
1. வுல் (Wool) 2. ஊர்ஸ்ட ட் வுல் (Worsted Wool)

செயற்கை வகை (Synthetic Fibre)
தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் துணியைச் செயற்கைவகை என்பார்கள். உதாரணமாக விஸ்கோஸ், ரேயான் துணி வகைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. இரசான முறையில் நைலான், டெரின், டெரிலின் துணிகள் தயாரிக்கப்படுகின்றன.இன்றைக்கு மிகுதியாக விற்பனையாகும் துணி வகைகள் பெரும்பாலும் செயற்கை வகையே ஆகும்.நாகரீக முன்னேற்றத்துக்கேற்பத் துணி வகைகளில் எத்தனையோபுதுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்றைக்குச் செயற்கை வகைத் துணிகள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருக்கின்றன. மக்களும் செயற்கை ரகத் துணிகளின் நீடித்த உழைப்பையும் கண்கவர் டிசைன்களையும் அறிந்து, அவற்றையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக