டார்ட்டுகள் Darts பாடம் -13 - kalai tailor

ladies tailor

Home Top Ad

டார்ட்டுகள் Darts பாடம் -13

பாடம் -13
டார்ட்டுகள் Darts


உடைகளில் பிடிப்புத் தையல் தைப்பதை டார்ட்டுகள் (darts) என்பார்கள். உடைக்கு வடிவம் ஏற்படுத்துவதற்காகவும், உடலின் அங்கத்துக்கேற்ப உடை பொருந்துவதற்காகவுமே குறிப்பிட்ட சில பாகங்களில் மட்டும் பிடிப்புத் தையல்  (டார்ட்டு) தைக்கப்படுகிறது.
குறிப்பாக,
பெண்கள் போடுகிற ரவிக்கை (ப்ளவுஸ்) முன்பாகத்தில் மூன்று டார்ட்டுகள் தைக்கப்படுகின்றன.வரிவடிவத்தில் வரையும் போது உடையின் பிடிப்பு
தையலுக்காகக் கூடுதலாக அளவு எடுத்துக் கொள்கிறோம். பிறகு தைக்ககும் போது அந்தக் கூடுதல் அளவைப் பிடிப்புத் தையலுக்கு உபயோகப்படுத்திக்
கொள்கிறோம்,
உடைகளில் பிடிப்புத் தையல் (டார்ட்டுகள்) பெண்கள் உடையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன,
செய்முறையில் ஈடுபடும் போதும்,வாடிக்கையாளர்களுக்கு உடை தயாரிக்கும் போதும், மறக்காமல் டார்ட்டுகள் பிடிக்க வேண்டும்.
உடைகளின் பின் பாகத்தில் டார்ட்டுகள் பிடிக்கப்படுகின்றன. சில உடைகளில் முன் பாகத்தில் கழுத்துப் பகுதியில் டார்ட்டுகள்
பிடிக்கப்படுகின்றன. டிரௌசர் உடையின் பின் பாகத்தில்
டார்ட்டுகள் பிடிக்கப்படுகின்றன. டார்ட்டுகள், உடைகளில்
தேவையான வடிவத்தை ஏற்படுத்துவதால், டார்ட்டுள் உடை
தயாரிப்பதில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
ஆரம்பத்தில் தொழில் கல்வியாகத் தையல் கலையைப் பயிலும் மாணவ மாணவியர்கள் பிடிப்புத் தையல் பற்றித் தெரிந்து
கொள்ள வேண்டியது முக்கியம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக