பாடம் -15
கவடு இறக்கம்
முறை :1
புட்டச் சுற்றளவில் 1/3 பாகம் கவடு இறக்கம்.
உதாரணம்
புட்டச் சுற்றளவு = 39/3
கவடு இறக்கம் =13 அங்குலம்
மேலே குறிப்பிட்டுள்ள முறை, புட்ட சுற்றளவு கொண்டு கணித முறையில்
கண்டறியும் முறையாகும்.
முறை : 2
டிரௌசர் உடைக்கு முழு நீள அளவை எடுத்த பின்னர், வாடிக்கையாளரைச் சமநிலையில் இருக்கும் நாற்காலியில் உட்காரச் செய்து, இடுப்புப் பாகத்திலிருந்து நாற்காலியின் சமநிலைப்பாகம் வரையிலான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்க்க வேண்டிய அளவு 1.5 அங்குலம் ஆகும்.
உ.ம்: புட்டச் சுற்றளவு 36 அங்குலம்
இடுப்புப் பாகம் முதல் புட்டம் வரையிலான
அளவு (நாற்காலியில் உட்கார்ந்த நிலையில்) 10.5
சேர்க்க வேண்டிய அளவு +1.5
கவடிறக்கம் - 12
டிரௌசர் உடுத்த விரும்பும் பெண்கள் யாவரும் தொப்புள் பகுதியில் இடுப்புப் பாகமானது பொருந்தியிருக்கும் படியாகவே விரும்பி உடுத்துவதால் கவடு இறக்கம் கண்டறிய மேற்குறிப்பிட்டுள்ள முறையே ஏற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக